சாமான்யர்களின் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளை நிறுத்துங்க : திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தல்

By: Babu
23 June 2021, 3:20 pm
Kanimozhi Minister - Updatenews360
Quick Share

சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று சேலம் சம்பவத்திற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் தாக்கியதில், குடிபோதையில் இருந்த விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், விவசாயியை தாக்கி கொலை செய்த போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கும் வரை முருகேசனின் சடலத்தை வாங்கப்போவதில்லை என உறவினர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போலீசாரால் தாக்கப்பட்டு விவசாயி முருகேசன் என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போலீசார் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும். நடப்பது திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.

Views: - 344

0

0