பிரேமலதாவை நேரில் சந்தித்த திமுக எம்பி கனிமொழி… வீட்டுக்கே சென்று விஜயகாந்த் மகனுக்கு ஆறுதல்!
விஜயகாந்த் மறைந்த தருணத்தில், மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்த தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் மும்முரமாக இருந்தார் கனிமொழி.
அங்கிருந்தவாறே விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலும் அவர் குறித்த பழைய நினைவலைகளையும் கனிமொழி பகிர்ந்துகொண்டார். குறிப்பாக வேலை தேடி வரும் யாராக இருந்தாலும் கைவிடாதவர் விஜயகாந்த் என்றும் 75 பேருக்கு அவரது ஆஃபிஸில் வேலை தந்தவர் எனவும் கனிமொழி எம்.பி. புகழஞ்சலி செலுத்தினார்.
மேலும், தன் தாயார் ராஜாத்தி அம்மாள் மீது விஜயகாந்த் மரியாதை வைத்திருந்ததையும் அப்போது குறிப்பிட்டிருந்தார் கனிமொழி. சென்னை, தூத்துக்குடி, டெல்லி, என பிஸியாகவே ஓடிக்கொண்டிருந்த கனிமொழி, இன்று தனது தாயார் ராஜாத்தி அம்மாளை அழைத்துக் கொண்டு சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்றார்.
அங்கு பிரேமலதாவை சந்தித்து தனது துயரத்தை வெளிப்படுத்திய ராஜாத்தி அம்மாள், விஜயகாந்தின் ஆரம்பக்காலங்களில் அவர் கருணாநிதியோடு எந்தளவுக்கு நட்புறவு பேணினார் என்பது குறித்தெல்லாம் பழைய நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார்.
பிரேமலதா விஜயகாந்தும் தனது கணவருக்கு என்னாச்சு, என்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டது, என்பது குறித்தெல்லாம் ராஜாத்தி அம்மாளிடமும் கனிமொழியிடமும் எடுத்துக் கூறியிருக்கிறார். இந்தச் சந்திப்பின் போது விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.