கவர்னர் பதவியே காலாவதியான விஷயம்.. முதல்ல நாம் ஒழிக்க வேண்டியது ரம்மியை அல்ல… திமுக எம்பி கனிமொழி ஆவேசம்!!

Author: Babu Lakshmanan
28 November 2022, 6:56 pm
Quick Share

தூத்துக்குடி : ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் அனுமதியளிக்காத நிலையில், இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் இன்றுடன் காலாவதியானது. இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழி, கவர்னர் பதவியே ஒரு காலாவதியான விஷயம் என்ற அவர், அது இல்லை என்றாலே ஆன்லைன் ரம்மியை ஒழித்து இருக்க முடியும் என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது ;- எதை முதலில் செய்ய வேண்டும் என்பது நமக்கு தெரிய வேண்டும், கவர்னர் என்பது தேவையில்லாத ஒன்று. அந்த பதவி இல்லாமல் இருந்தாலே பல சிக்கல்கள் தீர்ந்து விடும். ஆன்லைன் ரம்மியை பாதுகாக்க ஏன் துடிக்கிறார்கள் என தெரியவில்லை, என அவர் கூறினார்.

Views: - 104

0

0