திமுகவில் இருந்து சிட்டிங் எம்பி, எம்எல்ஏ..! பாஜக முகாம் மாற முயற்சி…! ஸ்டாலின் அதிர்ச்சி

9 August 2020, 7:04 pm
Stalin-06-updatenews360
Quick Share

சென்னை: திமுகவில் இருந்து சிட்டிங் எம்பி, எம்எல்ஏ என முக்கிய பிரமுகர்கள் பாஜகவுக்கு தாவ இருப்பதாக பரபர தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவில் இருந்து சமீபத்தில் கு க செல்வம் எம்எல்ஏ டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். தமது தொகுதி தொடர்பான சந்திப்பு என்று விளக்கம் அளித்தார்.

MLA kk selvam -- updatenews360

பின்னர் சென்னை வந்த அவர் பாஜக தமிழக அலுவலகம் சென்று திமுகவுக்கு அதிர்ச்சி தந்தார். தாம் பாஜகவில் இணையவில்லை, ஆனால் திமுகவின் குடும்ப அரசியலை எதிர்க்கிறேன் என்றார். அவரின் இந்த நடவடிக்கை கண்டு அதிர்ந்த திமுக தலைமை செல்வத்தை சஸ்பென்ட் செய்தது. விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பியது.

இது இப்படி இருக்க, திமுகவில் இருந்து பல முக்கிய தலைகள் பாஜக முகாம் மாற உள்ளதாக சில நாட்களாக தகவல்கள் உலா வந்தவண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக 2 சிட்டிங் எம்பிக்கள் டெல்லிக்கே சென்று பிரதமரை சந்தித்து ஊர் திரும்பியதாக கூறப்படுகிறது.

அதில் ஒருவர் தொழிலதிபர், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் நடத்துபவர். திமுகவின் தேர்தல் செலவுகளில் முக்கிய பங்காற்றுபவர்.

இவர்களின் பிரதமருடனான சந்திப்பு திமுகவுக்கு பெரும் கிலியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த தகவல்கள் ஒரு பக்கம் டென்ஷனை ஏற்படுத்த, இப்போது வேறு ஒரு அதிர்ச்சியில் இருக்கிறது திமுக.

இந்த எம்பிக்களில் ஒருவர் பாஜகவுக்கு ஓகே சொல்லிவிட்டார். அதோடு மேலும் ஒரு சிட்டிங் எம்எல்ஏ ஒருவரும் அவருடன் பாஜக முகாமில் நுழைகிறார் என்பதே அது.

Stalin-10-updatenews360

கரூர் மாவட்ட அரசியலில் இவர் ஏக பிரபலம். எம்எல்ஏவாக இருக்கும் அவர் அண்மையில் தான் மற்றொரு கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்து தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக உள்ளார். மாவட்ட அரசியலில் மிக பிரபலம். தலைமைக்கு நிதி அள்ளி தருவதிலும் தாராள மனம் படைத்தவர்.

இவர்கள் மீது பலவிதமான வழக்குகள் உள்ளன. அண்மையில் கூட அந்த எம்பிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து அதிரடி காட்டியது. அதேபோன்று இந்த எம்எல்ஏ ஒரு காலத்தில் வேறு ஒரு கட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்து பவர்புல்லாக வலம் வந்தவர்.

அவர் மீது முக்கிய ஊழல் வழக்கு ஒன்றில் வலுவான ஆதாரம் சிக்கி இருக்கிறதாம். இந்த விவகாரங்களை அறிந்த திமுகவின் முக்கிய தலைவர்கள் அதிர்ந்து போய் தலைவர் ஸ்டாலினிடம் கூற, என்ன செய்வது என்று தெரியாமல் விக்கித்து போய் இருக்கிறாராம்.

Stalin-07-updatenews360-2

இந்த அரசியல் மாற்றங்கள், இன்னும் ஒரு சில நாட்களில் இறுதி கட்டத்தை எட்டும் என்றும் யாரும் எதிர்பாராத தருணத்தில் அதிகாரப்பூர்வமாக டெல்லி சென்று பாஜக தேசிய தலைவரை சந்திப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி  இருக்கின்றன. ஆக மொத்தம் வெகு விரைவில் திமுக 2 முக்கிய விக்கெட்டுகள் கழன்று பாஜக பக்கம் கரைசேர உள்ளன என்பது தான் லேட்டஸ்ட் தகவல்…!

Views: - 12

0

0