பட்டியலின மக்களை இழிவுபடுத்திய வழக்கு : திமுக எம்பி ஆர்எஸ் பாரதி நீதிமன்றத்தில் ஆஜர்

3 November 2020, 11:19 am
rs bharathi - updatenews360
Quick Share

பட்டியலின மக்களை இழிவுபடுத்திய வழக்கு தொடர்பாக திமுக எம்பி ஆர்எஸ் பாரதி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், எம்பியுமான ஆர்எஸ் பாரதி, பட்டியலின மக்களை இழிவுபடுத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆர்எஸ் பாரதியை மே 23-ம் தேதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விசாரணைக்கு பிறகு நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். சளி, காய்ச்சல் இருப்பதால் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கக்கோரியதை தொடர்ந்து, அவர் ஜாமீனில் விடப்பட்டார்.

இதனிடையே, திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, திமுக எம்பி ஆர்எஸ் பாரதி நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

Views: - 33

0

0

1 thought on “பட்டியலின மக்களை இழிவுபடுத்திய வழக்கு : திமுக எம்பி ஆர்எஸ் பாரதி நீதிமன்றத்தில் ஆஜர்

Comments are closed.