திருச்செந்தூர் முருகன் சன்னதியில் ஆர்எஸ் பாரதி..!! கந்த சஷ்டி விவகாரத்தில் பிராச்சிதம் தேடினாரா..?

20 November 2020, 1:14 pm
rs bharathi thiruchendur- updatenews360
Quick Share

திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சம்பவம் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

திமுக உள்ளிட்ட திராவிட இயக்கக் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டவர்களாவர். இப்படியிருக்க, அண்மையில் கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டத்தினர் இழிவுபடுத்திய போதும், ஒரு கண்டன அறிக்கையையும் விடாமல் திமுகவினர் இருந்து வருகின்றனர்.

இதனால், திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா, கோவில் கோவிலாக சென்று வழிபாடு நடத்துவதை மற்ற கட்சியினர் விமர்சித்து வந்தனர்.

இதனிடையே, இந்துக் கடவுள்களை இழிவுபடுத்துவதை கண்டித்து பாஜக சார்பில் முருகனின் அறுபடை வீடுகள் இருக்கும் மாவட்டங்கள் வழியாக, வேல்யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரை இறுதியாக திருச்செந்தூரில் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் திமுக நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர். பிறகு, சுவாமி தரிசனத்தை தொடர்ந்து பிரகாரத்தில் தொண்டர்களுடன் ஆர்எஸ் பாரதி போட்டோ எடுத்துக் கொண்டார்.

விபூதி சித்தரிடம் சென்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆசி பெற்ற சம்பவத்தை தொடர்ந்து மற்றொரு திமுக நிர்வாகி கடவுள் சன்னதியை நாடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவெளியில் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவராக பிம்பத்தை உருவாக்கி விட்டு, தற்போது திடீரென கடவுள் பக்தி வர திமுக நிர்வாகிகளுக்கு என்ன காரணம் ஏற்பட்டு விட்டது என பாஜக உள்ளிட்ட கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு திமுக உடந்தையாக இருந்து வருவதால், பிராச்சிதம் தேடி ஆர்எஸ் பாரதி திருச்செந்தூருக்கு சென்று இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 33

0

0