‘எனக்கு என்ன தகுதி இல்ல’ புலம்பிய தி.மு.க. சீனியர்…! உடனே போன் போட்ட ஸ்டாலினுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

14 September 2020, 6:30 pm
stalin phone - updatenews360
Quick Share

அண்மையில் தி.மு.க. பொதுக் குழுவில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் பதவியேற்றுக் கொண்டனர். இந்தக் கூட்டத்தில் இவர்கள் இருவருக்கும் பதவி கொடுக்கப்பட்டதை விட, மேலும் இருவருக்கு புதுப்பொறுப்புகள் வழங்கப்பட்டதுதான் சீனியர்கள் அனைவரும் பேரதிர்ச்சியாக இருந்தது.

அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரும் எதிர்பார்க்காத நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களாக ஆ. ராசா, பொன்முடி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ஏற்கனவே, தி.மு.க.வின் மாநில பதவிகள் எதுவும் கொடுக்கப்படாமல் நீண்ட காலம் ஓரங்கட்டப்பட்டு வரும் கனிமொழி, இந்த முறையாவது ஏதாவது பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால், இந்த முறையும் புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து சொல்லும் வாய்ப்பு மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டது. இதனால், கனிமொழியும், அவரது ஆதரவாளர்களும் தி.மு.க. தலைமை மீது அதிருப்தியில் இருந்து வருவதாக, பொதுக்குழு நடைபெற்ற அன்றைய தினமே செய்திகள் பரவி வந்தன.

தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், குடும்ப நலனுக்காக கனிமொழி பெரிய நடவடிக்கைகள் எதிலும் இறங்க மாட்டார் என்ற நம்பிக்கையில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், கனிமொழி இல்லாமல் கட்சியின் இன்னொரு சீனியரான திருச்சி சிவாவும், நிர்வாகிகள் நியமனத்தினால் அப்செட்டாகி இருப்பது ஸ்டாலினுக்கு பேரதிர்ச்சியாக இருந்துள்ளது. என்னால், கட்சியில் அறிமுகமான நபர்களுக்கு எல்லாம், என்னை விட உயர்ந்த பொறுப்பு வழங்கப்பட்டு வருவது வேதனையாக இருப்பதாக திருச்சி சிவா, தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைக் கேட்டதும், அதிர்ந்து போன ஸ்டாலின் உடனே திருச்சி சிவாவிற்கு போனை போட்டாராம். அப்போது, கட்சியின் முக்கிய பொறுப்புகளை பெறுவதற்கு எனக்கு என்ன தகுதி குறைவாக இருக்கிறது..? நீங்களே சொல்லுங்கள் என ஸ்டாலினிடம் கேள்விக்கு கேள்வி கேட்டாராம். இதற்கு எதுவும் பதில் சொல்ல முடியாத தலைவரோ, அமைதியாவே இருந்ததாக சொல்லப்படுகிறது.

“நான் ஒரு சுயமரியாதைக்காரன்னு நல்லாவே உங்களுக்கு தெரியும். என்னோட அனுபவத்த பொறுத்து எனக்கு கட்சிப் பதவிய தர வேண்டியது உங்க பொறுப்பு,” என ஓபனாக சொல்லிவிட்டாராம் திருச்சி சிவா. ஸ்டாலினும் எல்லாத்துக்கும் சரினு சொல்லிட்டு போன கட் பண்ணீட்டாராம்.

திருச்சி சிவாவோட கோரிக்கையை ஏற்று, கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படுமா..? இல்ல கனிமொழி லிஸ்ட்ல அவர சேர்த்திட்டு, அடுத்த நடவடிக்கையை ஸ்டாலின் எடுப்பாரானு பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

Views: - 0

0

0