வரும் 16ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

14 July 2021, 8:21 pm
Duraimurugan - Updatenews360
Quick Share

சென்னை ; வரும் 16ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

வரும் 16ம் தேதி சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் கூட்டம் நடைபெறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எம்பிக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக் கொண்டார்.

Views: - 125

0

0

Leave a Reply