திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகம் பெயர் அடைமொழி… முக்கிய பொறுப்பை தூக்கிக் கொடுத்த துரைமுருகன்…!!

15 July 2021, 1:16 pm
Quick Share

அன்பகம் என்பதை அடைமொழியாகக் கொண்டவருக்கு திமுகவின் முக்கிய பொறுப்பை வழங்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுகவின் இளைஞரணியில் பல ஆண்டுகளாக உழைத்து வருபவர் கலை. இவரது செயல்பாடுகளால் இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தின் பெயரை அடைமொழியாக வைத்து அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவரது அயராது உழைப்பை பாராட்டும் விதமாக, அன்பகம் கலையை திமுகவின் துணை அமைப்பு செயலாளராக நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திமுக சட்டதிட்ட விதிகளின்படி துணை அமைப்புச் செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்படுகிறார். திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தின் பெயரை அடைமொழியாகக் கொண்ட கலை, பல வருடங்களாக இளைஞரணியின் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியவர் என்பதுடன், திமுக தலைவர் ஸ்டாலினின் பயணத்திட்டங்களை திட்டமிடுவது, ஒருங்கிணைப்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொண்டு வந்தவர். எனவே, திமுகவில் துணை அமைப்புச்செயலாளர் பொறுப்பு இல்லாமல் இருந்த நிலையில், அந்த பொறுப்பும் உருவாக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 182

0

0

Leave a Reply