சாட்டை துரைமுருகன் கைது.. திமுகவின் மாஸ்டர் பிளானா..? தஞ்சமடைந்த வினோத்… கொதிப்பில் நாம் தமிழர்…!!

24 June 2021, 5:43 pm
stalin - sattai durai murugan - updatenews360
Quick Share

திருச்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை முருகன், நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் அணியை சேர்ந்தவர். இவர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பற்றி தவறாக பேசிய கார் உதிரி பாக கடைக்காரரை நேரில் சென்று மிரட்டிய சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இதனால், சாட்டை முருகன் உட்பட 4 பேரை திருச்சி கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, குஷ்பு ஆகியோர் படத்தை அவதூறாக பயன்படுத்தியதாகவும், மைனர் குழந்தைகளின் புகைப்படத்தை பயன்படுத்தியதாகவும் சாட்டை துரைமுருகன் மீது மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

sattai murugan- updatenews360

கார் உதிரி பாக கடைக்காரரை மிரட்டிய வழக்கில் துரைமுருகனுக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. எனினும், கரூர், தஞ்சை வழக்குகளில் நீதிமன்ற காவலில் சாட்டை துரைமுருகன் வைக்கப்பட்டிருப்பதால், அவர் சிறையிலேயே இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் மணல் அள்ளப்படுவதாக அவதூறாக பேசியதற்காகவும், சாட்டை துரைமுருகன் மீது கரூர் மாவட்ட திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கரூர் சைபர் கிரைம் போலீஸார் சாட்டை துரைமுருகன் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

மொத்தம் 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு வழக்கில் மட்டும் துரைமுருகனுக்கு பிணை கிடைத்துள்ளது.

இந்த நிலையில், சாட்டை துரைமுருகன் மீது முதலில் புகார் அளித்த திருச்சி கே.கே.நகர் பழுது நீக்கும் நிலைய உரிமையாளர் வினோத், அண்மையில் திமுக முதன்மைச் செயலாளர், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவைச் சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார். இந்த தகவலை வினோத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம், திமுகவின் தூண்டுதலால்தான் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டிருப்பார் என்று நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் தங்களின் ஆத்திரங்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

Views: - 241

0

0