திமுக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது வரி ஏய்ப்பு புகார் : விசாரணைக்கு ஆயத்தமாகும் வருமான வரித்துறை..!!!

Author: Babu
15 October 2020, 12:21 pm
Prasanth Kishore 02 updatenews360
Quick Share

திமுக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது அளிக்கப்பட்டுள்ள வரி ஏய்ப்பு புகார் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணையை தொடங்க உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் களம் காணும் முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுகவிடம், பெரும் தொகையை கட்டணமாக பெற்று விட்டு, தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்.

திமுகவின் வேட்பாளர் பட்டியல் முதல் முக ஸ்டாலின் பேச வேண்டிய விவகாரம் வரையிலும் பட்டியல் போட்டு கொடுத்து வரும் வேளையை பிரசாந்த் கிஷோரின் பெரிய குழு செய்து வருகிறது. திமுகவும் பிரசாந்த் கிஷோரை பெரிதும் நம்பியுள்ளது.

stalin prasanth kishore - updatenews360

இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் மீது டெல்லியில் உள்ள வருமான வரித்துறைக்கு வரி ஏய்ப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும் சென்னையில் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கினால் மட்டுமே, வரி ஏய்ப்பு குற்றத்தில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளாரா..? இந்த விவகாரத்தில் திமுகவிற்கு தொடர்பிருக்கிறதா…? என்பது குறித்து தெரிய வரும் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்,.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பிரசாந்த் கிஷோரை சூழ்ந்துள்ள வருமான வரிதுறையினரின் பிடி, திமுகவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 56

0

0