‘மீண்டும் ஒரு மொழி போரை சந்திக்க நேரிடும்’… இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

Author: Babu Lakshmanan
15 October 2022, 11:59 am
Quick Share

திருச்சி ; மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பையும், பொது நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

dmk protest - updatenews360

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.

அதேபோல, திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடைபெற்றது. திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.என். சேகரன், மண்டல தலைவர் மதிவாணன், மற்றும் கட்சி நிர்வாகிகள் இளைஞர் அணி, மாணவர் அணி,மகளிர் அணி என சுமார் 300க்கும் அதிகமானோர் இதில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

dmk protest - updatenews360

தமிழகத்தில் இந்தி திணிப்பு என்கிற கனவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும், அப்படி இல்லாவிட்டால் மீண்டும் ஒரு மொழிப்போரை சந்திக்க நேரிடும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.

dmk protest - updatenews360

இதே போல் மத்திய மாவட்ட, மேற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில், இளைஞர் அணி, மாணவர் அணி,மகளிர் அணி என சுமார் 300 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 481

0

0