திமுக ஆட்சி கவிழப் போகுது.. அதற்கு காரணம் முருகன் மற்றும் பெருமாள்தான் : அன்புமணி அட்டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2023, 5:59 pm
Anbumani - Updatenews360
Quick Share

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தேரோடும் வீதியில் தேர் போன்று அமைக்கப்பட்டிருந்த மேடையில் பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம‌.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பாமக எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என கேட்டதற்கு திமுக அளித்தது எங்கும் மது எதிலும் மது. திமுகவின் வீழ்ச்சி மதுவிலக்கு துறை அமைச்சர் முருகன் பெயரும் பாதியும் பெருமாள் பெயரும் பாதியும் கொண்ட செந்தில் பாலாஜியால் ஏற்படும் என்றார். முதலமைச்சரிடம் பலமுறை தற்போதுள்ள மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கிவிட்டு அந்த பதவிக்கு சமூக அக்கறை உடைய ஒரு நபரை நியமிக்க வேண்டும் என பலமுறை எடுத்துக் கூறி விட்டோம் எனவும் திமுக ஆட்சியில் மதுவை திணித்து திணித்து தற்போது உள்ள தலைமுறைகளை போதைப் பழக்கத்திற்கு முழுமையாக அடிமையாக்கி விட்டதுதான் திராவிட மாடல் என குற்றம்சாட்டினார். தற்போது உள்ள தலைமுறையை காப்பாற்ற முடியாது அடுத்த தலைமுறையாவது காப்பாற்ற பாமகவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் பேசினார்.

கூட்டத்தில் மாவட்டத் தலைவர் அமிர்த கண்ணன் உழவர் பேரியக்க செயலாளர் கோ. ஆலயமணி மாநில செயற்குழு உறுப்பினர் பானுமதி சத்யமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் எம்பிக்கு ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மகா ஸ்டாலின் பிரம்மாண்ட சுத்தியல் ஒன்றை வழங்கினார். மாவட்ட பாமக சார்பில் ஏர் கலப்பை நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 174

0

0