இலை எடுப்பது போல தான் ஆளுநரின் வேலை… கொஞ்சம் விட்டிருந்தா அவரு வீடு போயிருக்க முடியாது : ஆர்எஸ் பாரதி சர்ச்சை பேச்சு! (வீடியோ)

Author: Babu Lakshmanan
11 January 2023, 4:23 pm
Quick Share

ஆளுநர் ஆர்என் ரவி குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பேசிய சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் ஆர்என் ரவியின் உரையுடன் கடந்த 9ம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு விவகாரத்தை முன்னிறுத்தி, ஆளுநர் உரையை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் கூச்சலிட்டு, அமளியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், தொடர்ந்து, உரையாற்றிய ஆளுநர் ஆர்என் ரவி, திராவிட மாடல், அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை தனது உரையில் தவிர்த்தார். இதனைக் கண்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் அவையில் இருந்து பாதியில் வெளியேறினார்.

ஆளுநரின் இந்த செயல் சட்டப்பேரவையின் மரபை மீறியது என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், ஆளுநர் உரையின் போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது தான் மரபை மீறியது என்றும், உண்மைக்கு புறம்பாக தமிழக அரசு எழுதிக் கொடுப்பதை ஆளுநர் படிக்க வேண்டும் என்று நினைப்பது தவறானது என்று பாஜக உள்ளிட்ட கட்சியினர் பதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படியிருக்கையில், ஆளுநர் கண்டித்தோ, விமர்சித்தோ எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது என்று திமுக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

CM Stalin - Updatenews360

இந்த நிலையில், சர்ச்சைகளுக்கு பெயர் போன திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி ஆளுநர் ஆர்என் ரவி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறியதாவது :- ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது சார்ஜ்-னு சொல்லிட்டு ஓடுற மாதிரி, இன்னைக்கு சட்டசபையில் பேசிவிட்டு ஓடியிருக்கிறார். கொஞ்சம் கண்சாடை காட்டியிருந்தா வீட்டுக்கு போயிருக்க முடியுமா..? கையில எது கிடைக்கிதோ, அதை எடுத்து அடிச்சிருப்பான்.

இதே ஜெயலலிதா இருந்திருந்தால், அந்த ஆளு உதை வாங்காமா போயிருப்பானா..? இலை எடுக்கற மாதிரி ஆளுநர் வேலை. உனக்கு சமையல்காரன் வேலை, சமைச்சிட்டு போக வேண்டியதுதான். அதுக்கு-னு சாப்பாடு எல்லாம் விட்டுட்டு, வேற எதாவது கொண்டு வந்து விற்றால், பந்தியில் இருப்பவன் சும்மா இருப்பானா..?

ஆட்டுக்கு தாடி எதுக்கு, நாட்டுக்கு கவர்னர் எதுக்கு-னு அண்ணா சொன்ன பொன்மொழிகள். இப்படி சொன்னதுக்காகவே, அண்ணா பெயரை விட்டுட்டாரா என்னமோ, பெரியார், பெருந்தலைவர் காமராஜர், தமிழ்நாடு பெயர்களை எடுத்துவிட்டு பேசுகிற தைரியம். தைரியம் எல்லாம் இல்ல, அந்த ஆளு கை,கால் எல்லாம் உதறிடுச்சு.

முதலமைச்சர் நினைத்திருந்தால், அவை முன்னவர் துரைமுருகனை மூலம் வார்டன்களை வைத்து வெளியேற்றி இருந்தால், என்ன கழற்றியிருப்பே நீ, எனக் கூறியத பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 158

0

0