திமுகவை திக்கு முக்காட வைத்த கு. க. செல்வம்…! ஸ்டாலின் தலைமைக்கு விடப்பட்ட சவாலா..?

5 August 2020, 7:31 pm
Quick Share

சென்னை: டெல்லி சென்று பாஜக தலைமையை சந்தித்த எம்எல்ஏ கு.க. செல்வம், ஸ்டாலினுக்கு சவால் விடுத்தது ஒரு பக்கம் இருந்தாலும், இ பாஸ் எடுத்தாரா என்ற கேள்வி மறுபக்கம் எழுந்துள்ளது.

நேற்றும் சரி…இன்றும் சரி..! ஊடகங்களின் லைம் லைட்டில் இருப்பவர் கு.க. செல்வம். திமுகவை இந்த 2 நாட்களில் படு டென்ஷனுக்கு கொண்டு சென்று இருக்கிறார். மாவட்ட பொறுப்பு  வேண்டி ஸ்டாலினுடன் கேட்டும் கிடைக்காத காரணத்தாலும் குடும்ப அரசியலால் அவமானப்பட்டும் போன அவர் ஒரு கட்டத்தில் திடீரென டெல்லி பயணமானார்.

தமிழக பாஜக துணை தலைவர் விபி. துரைசாமியுடன் லைனில் இருந்த படியே அவருடன் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசி இருக்கிறார். தேசிய அளவில் இது பெரும் செய்தியாகி போனது. அவர் பாஜகவில் இணைகிறார் என்று தகவல்கள் பறந்தன.

ஆனால், அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி பிரச்னை சம்பந்தமாக டெல்லி வந்ததாகவும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசியதாகவும் கூறினார்.

ஒரு பக்கம் மோடியை புகழ்ந்து பேசிய அவர், மறுபக்கம் ஸ்டாலினையும், திமுகவின் குடும்ப அரசியலையும் வெளுத்து கட்டினார். என் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கட்டும், நான் எதிர்கொள்ள தயார் என்று அறிவித்தார். அதன் பிறகு திமுகவில் இருந்து அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

MLA kk selvam -- updatenews360

இந்த அரசியல் சூடு ஆறுவதற்குள் அப்படியே தமிழக பாஜக அலுவலகம் வந்தார். அனைவரும் எதிர்பார்த்தது போலவே அவருக்கு பாஜக உற்சாக வரவேற்பு அளித்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த கு.க. செல்வம், திமுகவையும், ஸ்டாலின் தலைமையையும் கடுமையாக சாடினார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, டெல்லிக்கு அவர் எப்படி சென்றார்? மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவே இங்கு ஒவ்வொருவரும் படாதபாடு பட்டுக் கொண்டிருந்த அவருக்கு எப்படி இ பாஸ் கிடைத்தது என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் சக்கை போடு, போடுகின்றன.

சுற்றி வளைத்து பார்த்தால் இந்த இ பாஸ் சர்ச்சைகளை திமுக தரப்பில் இருந்து பரப்பிவிடப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. அதை பார்க்கும் உடன்பிறப்புகள், கட்சி இருக்கும் நிலைக்கு இப்போது இந்த இ பாஸ் விவகாரம் தான் முக்கியமா? ஸ்டாலின் தலைமைக்கு விடப்பட்ட சவால் என்று பேசி வருகின்றனர்.

dmk_ stalin - updatenews360

ஆனால் எதை பற்றியும் கட்சி தலைமையோ, அதன் அடுத்தக்கட்ட தலைவர்களோ கவலைப்பட்டது போன்று தெரியவில்லை. இன்னமும் அடிமட்ட கட்சி தொண்டர்கள் தான் இதை லைன்கட்டி பேசி வருகின்றனர்… அந்தோ.. பரிதாப திமுக…!