மும்மொழிக் கல்விக் கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு மு.க. ஸ்டாலின் பாராட்டு!!
3 August 2020, 11:49 amசென்னை : தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக்கொள்கைக்கு தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த கல்விக் கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன..? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், தமிழகத்தில் இருமொழிக்கல்வி கொள்கையை மட்டுமே தொடரும் என முதலமைச்சர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழி கல்வி கொள்கை வேதனையும், வருத்தத்தையும் அளிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியட்டுள்ள அறிக்கையில், NEP2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி! மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.