சுதந்திர தினத்தன்று அறிவாலயத்தில் ஸ்டாலின் செய்த செயல்…! உடன்பிறப்புகள் ஆச்சரியம்

15 August 2020, 3:37 pm
Quick Share

சென்னை: திமுக வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி உள்ளார்.

சமீப காலமாக திமுகவின் கொள்கைகளுக்கும், அதன் நடவடிக்கைகளுக்கும் சவால்விடும் வகையிலான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கறுப்பர் கூட்டம், இந்துக்கள் பற்றிய விமர்சனங்கள், தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய வரம்பு மீறிய பேச்சு என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

Stalin-03-updatenews360-1

அடுத்து 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான முஸ்தீபுகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் இறங்க ஆரம்பித்துவிட்டன. திமுகவும் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதை மாற்றி அரியணை ஏற துடியாய், துடிக்கிறது.

அதற்காக வட நாட்டு இறக்குமதி பிரசாந்த் கிஷோர், ஐபேக் ஒப்பந்தம் என அறிவாலயத்திலும், கட்சியிலும் காட்சிகள் பரபரக்கின்றன. இந்துக்களின் ஏகோபித்த எதிர்ப்பால் கடுகடுப்பில் இருக்கும் ஸ்டாலின் திமுக முன்னணி தலைவர்களிடம் விவாதித்து வந்திருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, இந்துக்களின் ஆதரவான கட்சி என்று என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வேலைகளில் திமுக இறங்கிவிட்டது என்பது சில நடவடிக்கைகள் மூலமாக மெல்ல, மெல்ல தெரிய வந்திருக்கிறது.

அதில் முக்கியமானது தான் சுதந்திர தினமான இன்று கட்சி தலைமையகமான அறிவாலயத்தில் தேசிய கொடியேற்றி இருக்கிறார் ஸ்டாலின். வழக்கமாக அறிவாலயத்தில் 2ம் கட்ட தலைவர்கள் தான் தேசிய கொடியேற்றுவார்கள். 2011ம் ஆண்டில் இருந்து தான் இது ஆரம்பிக்கப்பட்டது.

அதுவும் ஈர்ப்புடன் இருக்காது. ஒரு சடங்காகவே இருக்கும். ஆனால் இந்த முறை வித்தியாசமாக கட்சி தலைவராக ஸ்டாலின் நேரடியாக வந்து கொடி ஏற்றி இருக்கிறார். அதற்கான காரணம், அங்கே சுற்றி, இங்கே சுற்றி இந்துக்கள் ஓட்டு, தேசப்பற்று என்று வந்து நிற்கிறது.

எங்கே இந்துகளின் ஓட்டு இந்த முறை இடம்மாறி விடுமோ என்ற பயம் திமுகவில் தோன்ற ஆரம்பித்துள்ளது என்பது சமீபகாலமாக பேசப்படும் விஷயம். இந்துக்களின் எதிரி என்ற முத்திரை வலுவாக விழுந்துவிட்டதால் அதை அகற்ற திமுக இதுபோன்று நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.

ஆன்மீக அரசியலும் இப்போது அவசியம் என்று பிரசாந்த் கிஷோர் தரப்பு ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவே இப்படி வெளிப்பட்டு இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டாலினின் இந்த செயல் கண்டு உ.பிக்களும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

Views: - 38

0

0