திமுகவில் இருந்து கு.க. செல்வம் சஸ்பென்ட்…! ஸ்டாலின் அறிவிப்பு

5 August 2020, 12:56 pm
Quick Share

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ  கு.க.செல்வம் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஸ்டாலின் எம்எல்ஏவாக இருந்த ஆயிரம் விளக்கு தொகுதியில் இப்போது திமுகவின் எம்எல்ஏவாக இருப்பவர் கு.க. செல்வம். கட்சி பதவி பெறுவது தொடர்பாக தலைமையிடம் ஏற்பட்ட அதிருப்தியால் திமுகவில் இருந்து விலக முடிவெடுத்தார்.

டெல்லி சென்று பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் என்று தகவல்கள் வெளியாகின. நட்டாவை சந்தித்த செல்வம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, தொகுதி விவரங்கள் தொடர்பாக பாஜக தலைமையை சந்தித்ததாக கூறினார்.

திமுகவில் உட்கட்சி தேர்தல் ஒழுங்காக நடைபெறவில்லை. ஸ்டாலின் அதை சரியாக நடத்த வேண்டும், இந்து கடவுகளை அவதூறு செய்தவர்களையும் அவர் கண்டிக்க வேண்டும். என் மீது கட்சி என்ன நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை என்று கூறினார்.

அவரது இந்த பேட்டி தமிழக அரசியல்களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஸ்டாலினும் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ  கு.க.செல்வம் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கழக கட்டுப்பாட்டை மீறியதாலும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என்று கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் ஸ்டாலின் தமது அறிவிப்பில் கூறி உள்ளார்.

Views: - 7

0

0