‘இதுக்கு ஒரு எல்லையே இல்லையாப்பா’ : அடுத்தடுத்து போஸ்டர்களால் நொந்து போகும் திமுக!!
19 November 2020, 10:00 pmசென்னை , கோவை, மதுரை , திருச்சி , சேலம் உள்ளிட்ட நகரங்களில் திமுக தலைவர் மு. க ஸ்டாலினை கிண்டல் செய்யும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. ‘செயல் தலைவனா..? அறிக்கை நாயகனா..?, மண்ணின் மைந்தனா, உளறல் நாயகனா.., தன்னம்பிக்கை தலைவனா..? துண்டுச்சீட்டு தலைவனா ..? மக்களில் ஒருவரா.. மடாதிபதியா.. மக்களுக்கான போராளியா.. குடும்ப போராளியா..?’ என்பன போன்ற வாசகங்கள் இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
லேட்டஸ்ட்டாக ஊரடங்கில் அயராது உழைத்தவர் தேவையா.. அழகாக ‘விக்’ மாட்டியவர் தேவையா.. என்ற போஸ்டர் திமுகவினரை அதிர வைத்திருக்கிறது. ஏற்கனவே, இம்சை அரசன் ‘இரண்டாம் புலிகேசி ரேஞ்சுக்கு’ கொண்டு சென்றவர்கள் இனியும் என்ன செய்யப் போகிறார்களோ என திமுகவினர் வெளிப்படையாகவே புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
திமுக ‘டேமேஜ் போஸ்டர்’ விவகாரம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விட்டது. வழக்கமாக அரசியல் கட்சியினர் நீயா நானா என்ற போட்டியில் சாதனை விபரங்களை தெரிவிப்பதும், மாற்று கட்சியினர் தவறுகளை சுட்டிக் காட்டுவதும் வாடிக்கையான ஒன்றுதான். அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்பாக விமர்சன போஸ்டர்கள் ஒட்டுவதும் வழக்கமாக நடக்கும் செயல் தான். ஆனால் விமர்சன போஸ்டர்களை திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அவர் மகன் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தாங்க முடியாமல் தவிப்பதும், துடிப்பதும் ஆவேசமாக அறிக்கை விடுவதும் திமுகவினர் மத்தியிலேயே கேலிக்கூத்தாக போய்விட்டது.
கலைஞர் கருணாநிதி போல் இவரால் சமாளிக்க முடியவில்லை. ‘சுடலை, கோமாளி, உளற வாயர்’ என ஏகப்பட்ட கிண்டல் பெயர்களை சொல்லி தலைவர் ஸ்டாலினை அடையாளப்படுத்துகிறார்கள். சாதாரண சப்பை மேட்டர கூட சமாளிக்க முடியாத இவர்கள் எப்படி ஆட்சியைப் பிடிப்பார்கள் என திமுக தொண்டர்கள் வெளிப்படையாக அதிருப்தி காட்டி வருகிறார்கள். தன்னை சமாளிக்க முடியாத தலைவன் எப்படி தமிழகத்தை காப்பாற்றுவார் என்ற சந்தேகமும் உடன்பிறப்புகளுக்கு உதறலை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்கள் பிரச்சனையை ஓரம் கட்டிவிட்டு மு.க ஸ்டாலின் இமேஜை காப்பாற்றும் நோக்கத்தில் திமுக முக்கிய தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் , போராட்டம் என வெட்டி பந்தா காட்டுகிறார்கள். ஊர் ஊரா போரோம் தலைவர அசிங்கப்படுத்தி இருக்கிற போஸ்டரை கிழிப்போம். அதிமுக காரங்க சாதனை போஸ்டரையும் கிழிச்சு விசுவோம். அடுத்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்கள சேர்த்துவோம் என திமுக காரர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அடப் போங்கய்யா இவங்களுக்கு வேற வேலையே இல்ல என பொதுமக்களும் வெறுப்பு காட்டத் தொடங்கிவிட்டார்கள்.
மு.க ஸ்டாலின் அரசியல் ஹீரோவாக மாற மாட்டார். அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஐடியாவை கேட்டு திமுகவை காணாமல் போக செய்துவிடுவார் என உடன்பிறப்புகள் புலம்பி தவிக்கின்றனர்.
0
0
1 thought on “‘இதுக்கு ஒரு எல்லையே இல்லையாப்பா’ : அடுத்தடுத்து போஸ்டர்களால் நொந்து போகும் திமுக!!”
Comments are closed.