வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் பஜக சார்பில் போட்டியிட்ட பால் கனகராஜிற்கு தாமரை சின்னத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும் திருவெற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் பாஜக சார்பில் தெருமுனை கூட்டமானது நடைபெற்றது
இதில் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றார்
மேடையில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவில் இணைந்து 25 ஆண்டுகள் ஆகின்றது எனவும் என்னை வழிநடத்தி செல்லும் பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கட்சித் தொண்டர்கள் இணைந்து பணியாற்ற நான்கு வருடங்கள் ஆகி இருந்த நிலையில் தற்போது ஆளுநர் பதவியை விட்டு வந்ததாகவும் ஆளுநர் பதவியில் இருக்கும் போது 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உடன் இருப்பதால் மக்களிடம் நெருக்கமாக இருக்க முடியாது என்பதால் பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்களோடு மக்களாக இணைந்து இருப்பதாகவும், நமது தமிழ் கலாச்சாரத்தின் நினைவாக பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் இருந்து சென்ற 40 பேர் செங்கோலை நீக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் எனவும் அதேபோன்று 2026 இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்து சட்டமன்றத்தில் செங்கோலை பாரத பிரதமர் முன்னிலையில் வைக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதுவும் இல்லை என்று தெரிவிக்கும் திமுக அரசு பாராளுமன்றத்தில் செங்கோல் தன் அலங்கரித்து உள்ளதாகவும் தமிழக அரசு மின்சார கட்டணத்தை மூன்றாவது முறையாக உயர்த்தி உள்ளதாகவும் மின் உற்பத்தியில் எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் வெளியில் இரந்து மின்சாரத்தை வாங்குவதின் காரணமாகத்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது மின் உற்பத்தி செய்வதற்கு முயற்சி செய்யவில்லை என குற்றம் சாட்டினார்
மேலும் படிக்க: இது எங்க ஏரியா.. நாங்க எதுக்கு போகணும்? வனத்துறை விரட்டியும் முரண்டு பிடித்த யானைகள் : வீடியோ!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் செய்தியாளர்களிடையே பேசியதாவது
துணை முதலமைச்சர் பதவியை
பட்டியல் இனம் சேர்ந்த சகோதரருக்கு தர தயாரா?
இன்னைக்கு சமூக நீதியை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் ஆனால் முதலமைச்சர் பதவியை நீங்கள் கொடுத்திருக்க வேண்டும்.
இதற்கு திருமாவளவன் என்ன சொல்கிறார் என்றால் காங்கிரஸ் நீங்கள் ஏன் அடிமையாக இருக்கிறீர்கள் நீங்கள் துணை முதலமைச்சர் கேட்கக் கூடாதா?
ஏன் துணை முதலமைச்சர் என்றால் ஒரு குடும்பத்தை மட்டும் சார்ந்து இருக்க வேண்டும் ஒரு தொண்டர்களுக்கு இருக்கக் கூடாதா. அதனால ஒரு கிரீடம் சிம்மாசனம் வைப்பதற்கான ஏற்பாடுகள்தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது இதை தமிழக மக்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
ஒரு பயத்தால் மட்டுமே உதயநிதி ஸ்டாலினை வைத்து எல்லா அமைச்சரையும் வைத்து வேலையை ஆரம்பித்துள்ளனர். கண்டிப்பாக 2026 இல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தெரிவித்தார்
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.