அவங்க பிரச்சனை உங்கள் காதுகளுக்கு கேக்கலையா? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2023, 12:59 pm
Annamalai - Updatenews360
Quick Share

தமிழக அரசு ஆவின் பால் நிறுத்தின் மூலம் கொள்முதல் விலையை பசும் பால் 35 இருந்து 42 ஆக உயர்த்தி எருமை பால் 44 ல் 51 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இதனை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும் தமிழக பால் வளத்துறை அமைச்சரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் சாலை மறியல் போராட்டத்திலும் பாலை சாலையில் கொட்டியும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் போராட்டம் அறிவித்துள்ளனர்.

ஆட்சிக்கு வந்தவுடன், பால் மற்றும் பால் பொருட்கள் விலையை தொடர்ச்சியாக உயர்த்திய திறனற்ற திமுக அரசு, பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்க்காமல் இருப்பது ஏன்?

பால் உற்பத்தியாளர்கள், ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க மாட்டோம்’ என்று போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் ஆவின் நிறுவன பால் நுகர்வோர்களுக்கு, பத்து லட்சம் லிட்டர் அளவில், ஆவின் பால் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு, பேச்சுவார்த்தை மூலம் சுமூக உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும் என தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Views: - 53

0

1