நடிகர் விவேக்கின் இதயத்தின் ஒருபுறம் 100 % அடைப்பு : மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

16 April 2021, 6:08 pm
Vivek - doctors - - updatenews360
Quick Share

சென்னை : மாரடைப்பு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காதவாறு அவருக்கு இன்று நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் மகள் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது இதய செயல்பாட்டை சீராக்க, தற்போது எக்மோ கருவியின் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, மருத்துவர்கள் கூறியதாவது :- காலை 11 மணியளவில் சுயநினைவு இல்லாத நிலையில் விவேக் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். கொரோனா தடுப்பூசியால் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை. விவேக்கின் இதயத்தின் ஒரு புறத்தில் 100 சதவீதம் அடைப்பு உள்ளது. இதயத்தில் ஏற்பட்ட அடைப்பால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் மிகவும் குறைந்துள்ளது. அவருக்கு மாரடைப்பு மற்றும் இருதய நோய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் விவேக்கிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ கருவி உதவியுடன் விவேக்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு கொரோனா தொற்று ஏதும் பாதிக்கப்படவில்லை, எனக் கூறினார்.

Views: - 157

0

0