கழிவறையில் சிறுத்தையுடன் 7 மணி நேரம்… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நாய்…!!
4 February 2021, 12:24 pmகர்நாடகா : சிறுத்தையுடன் கழிவறையில் சிக்கிக்க கொண்ட நாய் ஒன்று, 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.
கர்நாடகாவின் பில்னெலே என்னும் கிராமத்திற்குள் தெரு நாயை விரட்டியவாறு சிறுத்தை ஒன்று நுழைந்தது. அப்போது, உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்த ஒரு வீட்டின் கழிவரைக்குள் நாய் புகுந்தது. இதைக் கண்ட சிறுத்தையும் அந்தக் கழிவறைக்கு நுழைந்தது. அந்த சமயம் வீட்டின் உரிமையாளரும் கழிவறைக்கு செல்ல முயனற போது, கதவுக்கு வெளியே சிறுத்தையின் வால் தெரியவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால், உடனடியாக கழிவறையின் கததவை பூட்டிய அவர், ஊர் பொதுமக்களையும், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளையில், வனத்துறையினரின் இந்த நடவடிக்கையினால், சிறுத்தை ஆத்திரமடைந்து, உள்ளே இருக்கும் நாயை வேட்டையாடி விடும் என்ற அச்சமும் அங்கிருந்தவர்களுக்கு எழுந்தது. ஆனால், நடந்ததோ வேறு.
நாலு சுவருக்கு நடுவே சிக்கிக் கொண்டதால் பயந்து போன சிறுத்தை, கழிவறையின் ஒரு மூலையிலும், நாய் மற்றொரு மூலையிலும் அச்சத்துடன் படுத்துக் கிடந்தன.
இதனிடையெ, ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டு, அதின் மீதேறிய வனத்துறை அதிகாரிகள், சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். ஊசி குத்தப்பட்ட அதிர்ச்சியில், சிறுத்தையும் விரிக்கப்பட்ட வலையில் மாட்டிக் கொண்டது. அதனை இலாவகமாக பிடித்த வனத்துறையினர், சிறுத்தையை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
அதேபோல, கழிவறையில் சுமார் 7 மணி நேரம் சிறுத்தையுடன் மரண பீதியில் இருந்த நாயும் பத்திரமாக மீட்கப்பட்டது.
0
0