இருமொழிக் கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு : மத்திய அரசுக்கு அமைச்சர் அன்பழகன் கடிதம்..!

7 September 2020, 4:22 pm
k-p-anbalagan - updatenews360
Quick Share

சென்னை : இருமொழிக் கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு என்று மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார்.

பல்வேறு மாறுதல்கள் மற்றும் புதிய அம்சங்களுடன் தேசிய கல்விக் கொள்கையின் வரைவு ஒன்றை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அனுப்பியது. இந்த வரைவு தொடர்பாக தங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது. தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட சில அம்சங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும், இருமொழி கொள்கையில் உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என்பதே எங்களின் நிலைப்பாடு. இனி வரும் காலங்களிலும் அந்தக் கொள்கையே கடைபிடிக்கப்படும். நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0

0

0