நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக வெளியேறிய நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, பாமக, தேமுதிகவிடம் தனித்தனியே ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.
பாஜகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், பாமக 12 தொகுதிகளை கேட்டுள்ளது. அதேபோல, 12 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று தேமுதிக நிபந்தனை போட்டுள்ளது.
இதையடுத்து, அதிமுக மற்றும் பாஜகவுடன் தேமுதிக மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட்டை ஒதுக்க அதிமுக மற்றும் பாஜக மறுப்பு என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 4 தொகுதிகள் வரை ஒதுக்கலாம், ஆனால் ராஜ்யசபா சீட் வழங்க முடியாது என இரு கட்சிகளும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கள்ளக்குறிச்சி, விருதுநகர், மதுரை என தங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை தேர்வு செய்து தேமுதிக விருப்பப்பட்டியலை தந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவில் ஏற்கனவே கூட்டணியில் அதிக கட்சிகள் இருக்கும் நிலையில், அவர்களுக்கு தொகுதிகளை பிரித்துக் கொடுக்கவே பெரும் சிக்கலில் திமுக இருந்து வருகிறது. இப்படியிருக்க, திமுக பக்கம் தேமுதிக சென்றால், ஒரு தொகுதியோ அல்லது 2 தொகுதியோத தான் கிடைக்கும். எனவே, திமுக கூட்டணியில் தேமுதிக செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு.
மேலும், கடந்த காலங்களை காட்டிலும் தற்போது தேமுதிகவுக்கு வாக்கு வங்கி குறைந்து விட்டது என்பதால், தனித்து போட்டியிடுவது என்பது முடியாத காரியம். ஆகவே, அதிமுக அல்லது பாஜகவில் ஒதுக்கப்படும் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதே அந்தக் கட்சிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பாக கருதப்படுகிறது.
அதேவேளையில், கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், அனுதாப ஓட்டுக்கள் விழும் என்ற நம்பிக்கையில் தேமுதிக ஏதேனும் வித்தியாசமான முடிவுகளை எடுக்குமா..? என்பதனையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.