கடற்படை தளத்தில் ட்ரோன்கள் பறக்க தடை: கொச்சி கடற்படை அறிவிப்பு!!

10 July 2021, 10:12 am
Quick Share

கொச்சி: கொச்சி கடற்படை தளத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள கொச்சியில் இந்திய கடற்படை தளம் செயல்பட்டு வருகிறது. கடற்படை தளத்தில் இருந்து, 3 கி.மீ., சுற்றளவில் ட்ரோன் மற்றும் ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

drone - updatenews360

இப்பகுதியில் பறக்கும் ட்ரோன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுவதுடன் அதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர் என கடற்படை நேற்று அறிவித்துள்ளது.

ஜம்மு விமானப்படை தளத்தில் கடந்த மாதம் நடந்த ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Views: - 99

0

0