தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை…!!

11 April 2021, 9:07 am
cm meeting - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமெடுத்து வருகிறது. நாட்டில் கொரோனாவின் முதல் அலையைவிட 2வது அலை மிகுந்த வீரியித்துடன் வேகமாக வருவது மத்திய-மாநில அரசுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த தொற்றை தடுப்பதற்கு மத்தியஇ மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியது.

கொரோனா பரவலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகு ஒரு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 17

0

0