தளர்வுகளுடன் கூடிய இ-பாஸ் கட்டாயம்… எதற்காக தெரியுமா…? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

27 August 2020, 3:50 pm
Edappadi palanisamy - updatenews360
Quick Share

சென்னை : மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ-பாஸ் கட்டாயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கடலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது :- தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. போதுமான மருத்துவ உபகரணங்களும் இருப்பில் உள்ளன. கடலூரில் மட்டும் 39 நடமாடும் மருத்துவக் குழுக்கள் இயங்கி வருகின்றன.

கடலூரில் ஒவ்வொரு நாளும் சுமார் 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றன. தளர்வுகளுடன் கூடிய இ-பாஸ் முறை கட்டாயம் வேண்டும். ஏனெனில், அப்போதுதான், யார் யார் எங்கெல்லாம் சென்றிருக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும்.

கொரோனாவால் பாதிப்புக்கு ஆளான நபர்கள் பயப்பட வேண்டிய தேவையில். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையிலும், உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்திய பிறகே நீட் தேர்வை நடத்த வேண்டும் என தமிழக அரசு சார்பில் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது, எனக் கூறினார்.

Views: - 0 View

0

0