கரூரில் தொழிலதிபர் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் “இளந்தளிர் பைனான்ஸ்” அலுவலகம் மற்றும் அம்பாள் நகரில் உள்ள அவரது வீடு ஆகிய இரண்டு இடங்களில் நேற்று காலை 8 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.
மாலை 6 மணி வரை தொடர்ந்து, 10 மணி நேரத்திற்கு பிறகு சோதனையை முடித்துக் கொண்டு அங்கிருந்து சில ஆவணங்களை இரண்டு பைகளில் அதிகாரிகள் எடுத்துச் சென்று சோதனை நிறைவு பெற்றது.
இதனிடையே, சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான “தனலட்சுமி செராமிக்ஸ்” என்ற டைல்ஸ் கடை மற்றும் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு உள்ளிட்ட இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனையானது, தொடர்ந்து 13 மணி நேரமாக இரவிலும் நடைபெற்றது. மேலும், 2வது நாளாக இன்று சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் தொடர்கிறது. இந்த சோதனையின் இடையே டைல்ஸ் ஷோரூமுக்கு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் அதிகாரிகள் சில ஆவணங்களை நகல் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, நாமக்கல் பரமத்திவேலூரில் காளியப்பன்ன என்பவரின் வீடு மற்றும் நிதி நிறுவன அலுவலகத்திலும் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.