முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது : இபிஎஸ் கண்டனம்

Author: kavin kumar
21 February 2022, 9:35 pm
Quick Share

சென்னை : திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது, சென்னை வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை பிடித்து அதிமுகவினர் தாக்கினர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் முன்னிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற நிலையில், திமுகவை சேர்ந்த அந்த நபர் அரை நிர்வாண கோலத்துடன் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர் 40 பேர் மீது சென்னை மாநகர போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். சென்னை, பட்டினப்பாக்கம் அவர் இருந்தபோது போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த கழக அமைப்பு செயலாளர் திரு.D.ஜெயக்குமார் அவர்களை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது” என்று பதிவு செய்துள்ளார்.

Views: - 696

0

0