என்எல்சி விவகாரத்தில் அதிமுக எம்எல்ஏவை கைது செய்த நடவடிக்கைக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் – என்எல்சி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளுக்கு வளையமான்தேவி கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியில் என்எல்சி நிர்வாகம் இறங்கியது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிலத்திற்கான உரிய இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை எனவும், என்எல்சி கூறும் நிரந்தர பணி பற்றியும் உறுதியான தகவல் வெளியாகவில்லை என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்களுடன் அதிமுக நடத்தியது. இந்த போராட்டத்தில், புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண் மொழி தேவன் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தின் போது, வளையமான்தேவி கிராமத்திற்குள் அதிமுக எம்எல்ஏ நுழைய முயன்றார். அப்போது, காவல்துறையினர் தடுத்து அவரை கைது செய்தனர்.
அதிமுக எம்எல்ஏ கைது சம்பவத்திற்கு அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- என்எல்சி நிறுவனத்தின் கைப்பாவையாக மாறி, தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டியுள்ள இந்த விடியா திமுக அரசு. 110 நிறுவனத்திற்கு நிலம் தர மறுத்து எதிர்ப்பு தெரிவிக்கும் புவனகிரி, கம்மாபுரம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள மக்களை, அவர்களது வீடுகளிலேயே காவல் துறையினரால் சிறைபிடிக்கப்பட்டது வெட்கக்கேடானது.
இதனை எதிர்த்து, அவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன், என தெரிவித்துள்ளார்.
வருகிற 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தேர்தல்…
இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறையின் கீழ் செயல்படும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும்…
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில்…
சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்திய உணவு டெலிவரி பணிகளில் கோலோச்சி வரும் நிலையில் நாமக்கல் பகுதியைச்…
பண மோசடி வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் பண மோசடியில் ஈடுபட்டதாக…
கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ).…
This website uses cookies.