எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் மரியாதை!!

By: Babu
7 October 2020, 11:30 am
jaya memorial respect admk - updatenews360
Quick Share

சென்னை : அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவினர் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர்.

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். மேலும், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் இருந்து மெரினா உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களும் மரியாதை செலுத்தினர்.

Views: - 87

2

0