‘3 நாட்களுக்கு சென்னையிலேயே இருங்க’ : அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!!

Author: Babu
3 October 2020, 12:58 pm
Edappadi palanisamy - updatenews360
Quick Share

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 5ம் தேதி முதல் 3 நாட்களுக்கு சென்னையிலேயே இருக்குமாறு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து விட்டுதான் தேர்தலை சந்திக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன்படி, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் முதலமைச்சர் வேட்பாளராக விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதற்காக, அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.ஸை தனித்தனியே சந்தித்து பேசியும் வருகின்றனர்.

இதனிடையே, வரும் 6ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்த நிலையில், வரும் அக்., 5,6,7 ஆகிய 3 நாட்களும் அமைச்சர்கள் சென்னையிலேயே இருக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

Views: - 45

0

0