அரசியல் சாணக்கியராகிறாரா எடப்பாடியார்..? எதிர்கட்சிகளை திணற வைக்கும் சர்ப்பிரைஸ் மூவ்…!

31 August 2020, 12:10 pm
EPS- updatenews360
Quick Share

முதல்முறையாக முதலமைச்சர் சிம்மாசனத்தை அலங்கரித்த போது, கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இதனால், அவர் துவண்டு போகவில்லை. மாறாக, தனது செயல்களினால், அனைத்தையும் சூரசம்ஹாரம் செய்ய வேண்டும் என்ற அவரது மன நிலையை, கடந்த இரு ஆண்டுகளில் தமிழகம் கண்ட காட்சிகள்தான் சான்றானது.

தற்போது தமிழக அரசியலில் தனக்கென்ற ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட நிலையில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இவரது ஒவ்வொரு அசைவும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

அமெரிக்க அரசியல் ‘designated survivor’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதுண்டு. இந்த வார்த்தைக்கு தகுதியான வேட்பாளர் என்று பெயர். அதிபரோ அல்லது துணை அதிபரினால் ஆட்சியை மேற்கொண்டு தொடர முடியாத நிலையில், தகுதியான மூத்த உறுப்பினர்களுக்கு நேரடியாக அந்தப் பொறுப்பு வழங்கப்படும். தமிழக அரசியலில் தற்போது ‘designated survivor’ என்ற வார்த்தைக்கு பொறுத்தமானவர் எடப்பாடி பழனிசாமி தான் என அரசியல் வல்லுநர்கள் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளனர்.

EPS_UpdateNews360

கொரோனாவை வைத்து அரசியல் செய்ய கழுகு போல காத்திருக்கும் எதிர்கட்சியினருக்கு, தனது சைலண்ட்டான மூவினால், பதிலடி கொடுத்து வருகிறார். அதில், உதாரணமாக சிலவற்றை சொல்லப் போனால், முதலில் மும்மொழிக் கொள்கை விவகாரத்தை கையாண்ட விதம்தான்.

பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க., மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும், அப்போது அதை வைத்து தமிழக அரசின் இமேஜை டேமேஜ் செய்து விடலாம் என எதிர்கட்சிகள் அம்பை ஏய்வதற்கு ஆயத்தமாகியிருந்த தருணம். இதையனைத்தையும் புஷ்வானம் போல பொசுக்கி விட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதியில்லை, இது அண்ணா திராவிட கட்சி, இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் எனக் கூறி, இந்தி மொழி வருவதற்கான வாசலை படார் என்று அடைத்து விட்டார் முதலமைச்சர் பழனிசாமி.

இதேபோல, அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த சலசலப்பை, துரிதமாக அமைச்சர்களை அனுப்பி, மத்தியஸ்தம் பேசி, தலைமை என்றால் இப்படிதான் செயல்பட வேண்டும் என்பதற்கும் உதாரணமாக திகழ்ந்தார்.

EPS-ops-updatenews360

இது எல்லாம் இருக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த இந்த முடிவுதான், எதிர்கட்சியினரை பீதிக்குள்ளாக வைத்து விட்டது. அதுதான், அரியர் மாணவர்கள் தேர்வுக்கு பீஸ் கட்டி இருந்தாலே தேர்ச்சி என்னும் அறிவிப்புதான் முதலமைச்சரை தமிழக இளைஞர்கள் தோளில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். வரும் தேர்தலில் இளைஞர்களின் பங்கு அதிகம் உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சருக்கான இளைஞர்களின் ஆதரவு எதிர்கட்சியினரை புலம்ப வைத்துள்ளது.

இதனால், பீஸ் கட்டாதவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கோஷமிட்டு கொஞ்சநஞ்ச ஆதரவையாவது பிடிக்க முயற்சிப்போம் என ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

Views: - 7

0

0