விஷவாயு தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி : முதலமைச்சர் உத்தரவு

25 August 2020, 3:29 pm
Quick Share

காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை கிராமத்தில், கடந்த 20ம் தேதி கழிவுநீர் தொட்டியை தூய்மை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக வெளியாகிய விஷவாயு தாக்கியதில் லட்சுமணன், சுனில் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில், விஷவாயு தாக்கியதில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துக் கொண்டார்.

மேலும், உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Views: - 31

0

0