பொங்கல் பரிசு தொகுப்பு ஊழலை மறைக்கவே லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்து நாடகம் : திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
20 January 2022, 2:00 pm
EPS - salem- updatenews360
Quick Share

சேலம் : பொங்கல் பரிசு தொகுப்பு ஊழலை மறைக்கவே லஞ்ச ஒழிப்புத்துறை விட்டு சோதனை நடத்துவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு முறையாக முழுமையாக வழங்கப்படவில்லை. அதனால் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக மக்கள் கொண்டாட முடியாத நிலையில் இருந்தனர். இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ஆனால் இதுகுறித்து ஊடகங்கள் விவாதிக்கவில்லை. அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு ஊழல் முறைகேடுகள் குறித்து செய்திகள் வைரலாக பரவி வருகிறது.

நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது. ஆனால் நோய் பரவலை கட்டுப் படுத்தி விட்டோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தினமும் பேட்டி மட்டும் அளிக்கிறார். கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. இதையெல்லாம் மறைப்பதற்காக தான் கேபி அன்பழகன் மீது சோதனை நடத்தப்படுகிறது. திமுக அரசின் பழிவாங்கும் செயலாகவே இதை பார்க்கிறோம். பொய் வழக்கு அவதூறு ரெய்டு என்று திமுக அரசு செயல்படுகிறது.
இது கண்டிக்கத்தக்கது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம் நேர்மையாக தேர்தலை நடத்த உத்தரவிட்டு உள்ளது. எனவே வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை திமுக அரசு நேர்மையாக நடத்த வேண்டும் மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

முதலமைச்சர் முக ஸ்டாலின் காலையில் எழுந்து சைக்கிள் சைக்கிள் ஓட்டி டீ குடித்து விட்டு சென்று விடுகிறார்.எந்த திட்டங்களை புதியதாக அவர் கொண்டு வந்தார் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களையே அவர் தற்போது திறந்து வைக்கிறார். கூட்டு குடிநீர் திட்டத்தை பொறுத்தவரையில் அதிமுக ஆட்சியில் 75 கூட்டு குடிநீர் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

சேலத்தில் எடப்பாடி மேச்சேரி நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் என பல திட்டங்களை நிறைவேற்றி பாதுகாப்பான காவிரி தண்ணீரை மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது, என்று தெரிவித்தார்.

Views: - 327

0

0