அடக்குமுறைகளால் அடக்கிவிடலாம் என எண்ணாதீங்க.. இது பாசிச கொடுங்கோல் திமுக ஆட்சி ; பொரிந்து தள்ளிய எடப்பாடி பழனிசாமி..!!

Author: Babu Lakshmanan
2 November 2022, 5:48 pm
Quick Share

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் கைதுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மின்கட்டண உயர்வைக் கண்டித்து விருதுநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஆதரவாளர்களுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டதற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- மின்கட்டண உயர்வை திரும்பப் பெறவும்,மாதம் ஒருமுறை மின் பயன்பாட்டு அளவை எடுத்திடவும்,தடையில்லா மின்சாரம் வழங்கிடவும் வலியுறுத்தி,முறையாக அனுமதிபெற்று புதிய தமிழகம் கட்சியின் சார்பில் விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஏற்க சென்ற அதன் நிறுவன தலைவர் டாக்டர் திரு. கிருஷ்ணசாமி, அவர்களை கைது செய்துள்ளது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

இந்த பாசிச கொடுங்கோல் திமுக ஆட்சியின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். அடக்குமுறைகளால் எல்லோரையும் அடக்கிவிடலாம் என நினைக்கும் இழிகுணத்தை இந்த அரசு கைவிட வேண்டும். இல்லையேல், இது மக்கள் போராட்டமாக மாறும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 310

0

0