‘கிராமப்புற மருத்துவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நடவடிக்கை’: உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு..!

31 August 2020, 3:28 pm
Edappadi palanisamy - updatenews360
Quick Share

சென்னை : கிராமப்புற மற்றும் தொலைதூர மலைப்பாங்கான பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

கிராமப் பகுதிகள் மற்றும் தொலைதூர மலைப்பாங்கான பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, மருத்துவ மேற்படிப்புகளில் சேர்க்கைக்கான ஒதுக்கீட்டை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்ய மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எந்தவித பயனையும் எதிர்பார்க்காமல் கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும் மக்களுககாக உழைக்கும் அரசு மருத்துவர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த தீர்ப்பிற்கு வரவேற்பு தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில், மாநிலங்கள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம்” என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இது கிராமப்புற மருத்துவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமையும்.”எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 7

0

0