‘அதுக்கு வாய்ப்பே இல்ல’ : மம்தாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்…!!!

16 April 2021, 11:05 am
Mamata_Banerjee_UpdateNews360
Quick Share

கொல்கத்தா : மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 4 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கை ஒன்றை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.

மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், திரிணாமுல் காங்கிரஸை அகற்றிவிட்டு, ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என பாஜக தீவிரமாக மல்லுக்கட்டி வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 135 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 159 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 17-ம் தேதி 5-ம் கட்டமாக 45 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 22-ம் தேதி 6-ம் கட்டமாக 43 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 26-ம் தேதி 7-ம் கட்டமாக 36 தொகுதிகளுக்கும் , கடைசியாக 8-ம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் முடிவுகள் 4 மாநிலங்களோடு சேர்த்து மேற்கு வங்கத்திற்கும் வரும் மே2 ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், எஞ்சிய 4 கட்ட தேர்தலையும் ஒரேநாளில் நடத்த வேண்டும் என அம்மாநில முதலமைச்சர்மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், மம்தா பானர்ஜியின் கோரிக்கையை ஏற்பதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை என்று கூறிய தேர்தல் ஆணையம், தேர்தலில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இன்று தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது.

Views: - 45

0

0