மின்சாரத்துறையில் மெகா ஊழல்… ஆதாரங்களை வெளியிட்டு சொன்னதை செய்த அண்ணாமலை : வம்பில் சிக்கினாரா அமைச்சர் செந்தில் பாலாஜி..??

Author: Babu Lakshmanan
20 October 2021, 5:03 pm
annamalai - senthil balaji - updatenews360
Quick Share

சென்னை : மின்சாரத்துறையில் ஊழல் புகார் குறித்து 24 மணிநேரத்தில் ஆதாரங்களை வெளியிட தயாரா..? என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்த நிலையில், அண்ணாமலை ஆதாரங்களை அதிரடியாக வெளியிட்டுள்ளார்

சென்னையில் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் ஒரு திவாலான எனர்ஜி கம்பெனி ரூ.5,000 கோடி மதிப்பிலான ஆர்டரை தமிழக மின்சார வாரியத்துடன் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால், ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர், அந்த திவாலான கம்பெனியை விலைக்கு வாங்கி, அதனை தமிழக மின்சார வாரித்திடம் இருந்து இந்த ஒப்பந்தத்தை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

annamalai bjp - updatenews360

மேலும், அந்தக் கம்பெனியின் பெயரை தற்போது வெளியிட விரும்பவில்லை எனக் கூறிய அவர், இதை நீடித்தால் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் ஆவணங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம். தமிழக மின்சாரத் துறை அமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு இதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், என தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், அண்ணாமலையின் இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “24 மணிநேரம் கால அவகாசம் தருகிறேன். மின்சாரத்துறையில் ஊழல் நடக்கவிருப்பதாகக் கூறிய அண்ணாமலை, அந்த ஆதாரங்களை வெளியிட வேண்டும். இல்லையெனில் மன்னிப்பு கேட்க வேண்டும்,” எனப் பதிலளித்திருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Senthil Balaji- Updatenews360

அண்ணாமலை வெறும் அரசியலுக்காக இப்படி சொன்னாரா..? அல்லது உண்மையிலே ஆதாரம் வைத்துள்ளாரா..? என்ற சந்தேகமும், கேள்வியும் அனைவரிடத்திலும் எழுந்திருந்தது.

இந்த நிலையில், தான் சொன்னதைப் போலவே பாஜக தலைவர் அண்ணாமலை ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் கடந்த சில மாதங்களாக எந்தவித கட்டணத்தையும் செலுத்தவில்லை. இந்த சூழலில் திடீரென 4% கமிஷன் பிடித்தம் போக ரூ.29.64 கோடியை விடுவித்துள்ளது, இதற்கு பதில் கூறுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு டுவிட்டில், “இப்போது, நாங்கள் எதைப் பற்றி பேசுகிறோம் என்பது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். 5 ஆலோசகர்கள் சென்னையில் வீட்டில் அமர்ந்து கொண்டே 4% கமிஷனை வசூலித்து வருகின்றனர். இந்த வாரம் அனல்மின் நிலையம், அடுத்த வாரம் சோலார் பவர், அடுத்து அடுத்த வாரம் இன்னும் பெரிய நிறுவனம் தயாராகி வருகிறது,” என தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை சொன்னதைப் போலவே ஆதாரங்களை வெளியிட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, இதற்கு என்னச் சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை என பாஜகவினர் கிண்டல் செய்து வருகின்றனர்.

Views: - 291

1

0