இறுதி செமஸ்டர் தேர்வு எழுதாதவர்களுக்கான மறு தேர்வு தேதி அறிவிப்பு : அண்ணா பல்கலை.,,

7 November 2020, 3:36 pm
anna-university-updatenews360
Quick Share

சென்னை : இறுதி செமஸ்டர் தேர்வை எழுதாத மாணவர்களுக்கான மறுதேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் முன்பை விட தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து பிற ஆண்டு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வை ஏராளமான மாணவர்கள் தொழில்நுட்பகோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எழுத முடியாமல் போனது. எனவே, அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இறுதி செமஸ்டர் தேர்வை எழுதாத மாணவர்களுக்கான மறுதேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதாவது, வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஆன்லைனில் மறுதேர்வு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 21

0

0