இனி ஆன்லைன் தேர்வு கிடையாது… பி.இ., பி.டெக். மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு : அண்ணா பல்கலை., அறிவிப்பு

Author: Babu Lakshmanan
3 November 2021, 9:03 am
anna-university-updatenews360
Quick Share

சென்னை : பி.இ., பி.டெக். என்ஜினியரிங் மாணவர்களுக்கு இனி நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சுமார் 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டது. தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாளுக்கு நாள் சராசரி தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், செமஸ்ட தேர்வுகள் இனி நேரடி தேர்வுகளாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, முதுநிலை மற்றும் முழு நேர பி.இ., பி.டெக். என்ஜினியரிங் படிப்புகளில் வரும் ஆய்வக படிப்புகள், பி.ஆர்க்., எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகியவற்றில் வரும் கருத்தியல் மற்றும் ஸ்டூடியோ படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர்கள் நேரடி எழுத்துத்தேர்வுகளாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தொலைதூரக்கல்வியின் கீழ் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி. இறுதியாண்டு மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வும் நேரடியாக நடத்தப்பட இருக்கிறது.

மேலும், பி.ஆர்க். படிப்பு மாணவர்களுக்கான கல்வி சுற்றுலாவுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்து உத்தரவை பிறப்பித்துள்ளது.

Views: - 523

0

0