அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோ…. தொடர்ந்து கட்சியில் இருந்து நிர்வாகிகளை நீக்கும் அதிமுக…!!!

25 June 2021, 12:54 pm
eps ops - updatenews360
Quick Share

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்த சசிகலா, சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்றி விட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இதற்காக அவர் பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, அதிமுக நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடி விட்டு, அதன் ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சசிகலா இந்த செயலில் ஈடுபட்டு வரும் நிலையில், அவருடன் தொடர்பில் உள்ள மற்றும் உரையாடிய நிர்வாகிகளை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அண்மையில் சசிகலாவுடன் பேசிய ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 6 நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது :- கழகத்தின்‌ கொள்கை-ருறிக்கோள்களுக்கும்‌ கோட்பாடுகளுக்கும்‌ முரணான வகையில்‌
செயல்பட்டதாலும்‌, கழகத்தின்‌ கண்ணியத்திற்கு மாகு ஏற்படும்‌ வகையில்‌ நடந்து கொண்டதாலும்‌, கழகக்‌ கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும்‌ அவப்‌ பெயரும்‌ உண்டாகும்‌ விதத்தில்‌ செயல்பட்ட காரணத்தினாலும்‌, ஈரோடு புறநகர்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த

திரு. சிந்து ரவிச்சந்திரன்‌, (கழக வர்த்தக அணிச்‌ செயலாளர்‌)
திரு. கந்த சந்தசாமி, (ஈரோடு புறதகர்‌ மாவட்ட எம்‌.ஜி.ஆர்‌. மன்ற இணைச்‌ செயலாளர்‌)
திரு. ரமேஷ்‌, (ஈரோடு புறதகர்‌ மாவட்ட எம்‌.ஜி.ஆர்‌. இளைஞர்‌ அணிச்‌ செயலாளர்‌)
டாக்டர்‌ வரதராஜ்‌, (சத்தியமங்கலம்‌ தெற்கு ஒன்றியக்‌ கழகச்‌ செயலாளர்‌)
திரு. (காளியப்பன்‌, (கோபிசெட்டிபாளையம்‌ நகரக்‌ கழகச்‌ செயலாளர்‌)

ஆகியோர்‌ இன்று முதல்‌ கழகத்தின்‌ அடிப்படை உறுப்பினர்‌ பொறுப்பு உட்பட அனைத்துப்‌ பொறுப்புகளில்‌ இருந்தும்‌ நீக்கி வைக்கப்படுகிறார்கள்‌. கழக உடன்பிறப்புகள்‌ யாரும்‌ இவர்களுடன்‌ எவ்விதத்‌ தொடர்பும்‌ வைத்துக்கொள்ளக்‌ கூடாது என கேட்டுக்கொள்கிறோம்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 194

0

0