எருமை மாட்ட கூட தடுக்க முடியாது.. ரயிலை தடுக்க போறாங்க : காங்கிரஸ் குறித்து அண்ணாமலை கிண்டல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2023, 7:24 pm
Annamalai - Updatenews360
Quick Share

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உள்பட 4 பேர் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் இறங்கி ரெயில் மறியல் செய்ய சென்றார்கள்.

இந்த போராட்டத்தை பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கடுமையாக கலாய்த்து உள்ளார். அவர் கூறியதாவது:- நாங்கள் தேசிய கட்சி என்று தேய்ந்து போன காங்கிரசை தூக்கி சுமக்க பார்க்கிறார்கள். நாங்களும் ரெயில் மறியல் போராட்டத்துக்கு செல்வோம் என்று போராட சென்றார்கள்.

எத்தனைபேர் தெரியுமா? மாநில தலைவரையும் சேர்த்து 4 பேர். ஐயா… காங்கிரசின் சின்னம் கை. அந்த கையில் 5 விரல்கள் உண்டு. ஆனால் போராட்டத்துக்கு வந்தவர்கள் 4 பேர்தான்.

ஒரு விரல் கூட இல்லாமல் போய்விட்டது. எருமை மாட்டை கூட நாலு பேரால் தடுத்து விட முடியாது. இவர்கள் ரெயிலை மறிக்க போகிறார்களாம். இதுதாங்க காங்கிரஸ் நிலைமை.

மோடி என்பது ஒரு சமூகம். அந்த சமூகத்தையே திருடர்கள் என்று விமர்சித்ததால் ராகுல் தண்டனைக்குள்ளாகி இருக்கிறார். இவரைப்போல் ஏற்கனவே சிலர் தண்டனை பெற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

அப்போதெல்லாம் கண்டு கொள்ளாத காங்கிரஸ் இப்போது ராகுலுக்கு தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று குதிக்கிறது. சட்டத்தை மீறி விமர்சித்தால் இப்படித்தான் நடக்கும் என்பது தெரிய வேண்டாமா?…என கூறியுள்ளார்.

Views: - 93

0

0