‘EVER GREEN POWERFULL STAR கழகம் காக்க வந்த காவலரே தலைமை ஏற்க வா’ என்ற வாசகங்களுடன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கோவையின் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கட்சியின் எதிர்காலத்தை கருதி, அதிமுகவில் ஒற்றை தலைமை கொண்டு இயங்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளின் பெரும்பாலானோரின் எண்ணமாக உள்ளது. அதிலும், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தான் தலைமை ஏற்க வேண்டும் என்று 90% நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், இதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஒற்றைத் தலைமையை ஏற்க எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் அதற்கு முட்டுக்கட்டை போடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இபிஎஸ் – ஓபிஎஸ் என இருதரப்பாக பிரிந்து தங்களின் கருத்துக்களை சரமாரியாக தெரிவித்து வருகின்றனர்.
அதோடு, தலைமையேற்க வா என்று கூறி இருதரப்பினரும் மாறிமாறி போஸ்டர்களை அடித்து ஒட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், வரும் ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் சார்பாக கோவையின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
இந்தப் போஸ்டரில் ஓ. பன்னீர்செல்வம் புகைப்படம் இல்லாத நிலையில், ‘EVER GREEN POWERFULL STAR கழகம் காக்க வந்த காவலரே தலைமை ஏற்க வா’, என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
பெரும்பாலும் கோவை மண்டலம் முழுவதும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உட்பட 8 சட்டமன்ற உறுப்பினர் ஆதரவும் எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ).…
மனதை கொள்ளைக்கொண்ட நிலா… 2011 ஆம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தெய்வத்திருமகள்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர்…
திருப்பூர் முன்னாள் மேயரும், அமமுக மாவட்ட செயலாளருமான விசாலாட்சியின் மகள் தீபிகா - சிவஹரி திருமண வரவேற்பு விழாவில், அக்கட்சி…
டாப் நடிகை தென்னிந்தியா, பாலிவுட் என இந்தியாவின் இரண்டு பிரதான திரைத்துறைகளில் டாப் நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். “லக்”…
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக பூத் முகவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்…
பெயர் சூட்டிய ஆமிர்கான் தமிழின் மிக பிரபலமான நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் “வெண்ணிலா கபடிக் குழு” திரைப்படத்தின்…
This website uses cookies.