தேர்தலுக்கு முன்பு ஜனநாயக வாதியாக உள்ள அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சர்வாதிகாரிகளாக மாறுவதாக முன்னாள் காவல்துறை ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் காவல்துறை ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியதாவது:- தமிழகத்தில் எந்தெந்த தொன்மை வாய்ந்த கோயில்களை அரசால் பராமரிக்க முடியவில்லையோ, அவற்றை விட்டு அறநிலைத்துறை வெளியேற வேண்டும். தமிழகத்திலிருந்து காணாமல் போன பத்தில் ஒரு மடங்கு சிலை தான் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது.
165 தொன்மை வாய்ந்த கோவில்கள் பராமரிக்க முடியாமல் அழியுற்ற நிலையில் உள்ளது. தேர்தலுக்கு முன்பு ஜனநாயக வாதியாக உள்ள அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சர்வாதிகாரிகளாக மாறுகின்றார். தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழக காவல்துறையில் சாட்சிகளுக்கு இந்த மரியாதை வழங்க வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் பொய் சாட்சிகளை நம்பி காவல்துறை செயல்படுகிறது. எனது ஆலோசனைகளை தமிழக அரசு ஏற்பதில்லை. ஆலோசனை கேட்கும் அதிகாரிகள் தற்போது கிடையாது. ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை.
தெய்வ விக்கிரகங்களை மட்டுமே அனைவரும் பொக்கிஷங்களாக பார்க்கின்றனர். ஆனால் அது தவறு, அங்கு உள்ள கல்வெட்டுக்கள் ஆகியவையும் பொக்கிஷங்கள் தான். இவைகள் தான் அடையாளம் கொடுப்பதை அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ, அடையாளம் கொடுப்பது கிடையாது. நிதிக்காக தான் அரசியல் கட்சிகள் சண்டை போடுகின்றன. 20% கமிஷனுக்காக அரசியல் கட்சிகள் சண்டை போட்டுக் கொள்கின்றனர்.
சிதம்பரம் கோயில் மிக தொன்மையான கோயில் கனக சபை உள்ளிட்ட விவரங்களை நான் தலையிட விரும்பவில்லை. சிவனடியார்கள் மற்றும் பெருமாள் அடியார்கள் எங்கு இருக்கிறார்கள். அங்கு நான் செல்வேன். ஏனென்றால் அங்கு தான் ஆன்மிகம் உள்ளது.
மோசமான ஆட்கள் என்று காவல்துறையினர் பெயர் எடுத்து உள்ளோம். காவல்துறையினர் பெயர் பொதுமக்கள் மத்தியில் கெட்டுப் போய் உள்ளது. கருத்துக்கள் நடத்தினால் 10 சதவீத மக்கள் கூட காவல்துறையினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓசியில் ஆம்லெட் கேட்கும் நிலைக்கு காவல்துறையினர் உள்ளனர். காவல்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இருவரையும் சரி சம நிலையில் வைத்து பார்க்க வேண்டும், என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.