சென்னை ; முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் திமுகவின் இந்தியா கூட்டணி உள்ளதாகவும் நீட் விவகாரம் உட்பட அனைத்து பிரச்சினைகளில் திமுக பொதுமக்களை ஏமாற்றி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராஜா கல்லூரியில் நடைபெற்று வரும் வாக்காளர் சரிபார்ப்பு முகாமை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் ஆணையத்திற்கு உதவுகின்ற வகையில் புதிய வாக்களர்களை சேர்த்தல் மற்றும் திருத்தும் பணியில் அதிமுகவினர் பணியாற்றி வருகின்றனர்.
மக்கள் பற்றி கவலையில்லாமல் திமுக அரசு மோசமான நிர்வாகமாக உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சரும், முதலமைச்சரும் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் கவனம் செலுத்த தவறவிட்டது. சென்னையில் டெங்கு, ப்ளு உள்ளிட்ட காய்ச்சல் பரவி வரும் சூழலில் அதனை கட்டுப்படுத்தும் எண்ணமின்றி திமுக அரசு உள்ளது.
ஆட்சிக்கு வந்தது முதல் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்த மழைக்கு மழைநீர் தேங்காது என்று தான் தற்போது வரை திமுக அரசு கூறி வருகிறது. சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கி விடுகிறது. பெரும் மழை பெய்ய உள்ள சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. பள்ளம் தோண்டி, தடுப்புகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால்கள் இல்லை. ஆட்சியர் அலுவலம் பின் கூட மழைநீர் தேங்கி உள்ளது. மக்களை காப்பாற்ற எந்த முயற்சியும் திமுக அரசு எடுக்கவில்லை. மழைநீர் தேங்கி கிடப்பதை சமூகவலைதளங்களில் காவிரி நீர் திறந்துவிட்டதாக கிண்டல் செய்கின்றனர். வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கும் மழைநீரை சமூக வலைதளங்களில் கேலிபொருளாக விமர்சிக்கும் அளவிற்க்கும் தமிழகத்தை வைத்துள்ளனர்.
தொடர்ந்து, தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள், அவர்கள் காற்றின் வேகத்தால் எல்லை தாண்டும் நிலையில் உருவகிறது அதற்க்காக அவர்கள் மீது மனித உரிமை மீறும் செயலில் ஈடுபடும் கண்டிக்கதக்கது. இதுகுறித்து முதல்வர் கடிதம் மட்டுமே எழுதிவிட்டு அவர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்துகிறார், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகள் கண்டனம் தெரிவித்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், மத்திய அரசு மூலமாக இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். அதிமுக ஆட்சியில் இருக்கும் போது இலங்கை பிரச்சினையில் ஒருவித அச்சம் இருந்தது. முதலமைச்சரே நேரடியாக சென்று பிரதமரை சந்தித்து இவ்விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும்.
முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் திமுகவின் இந்தியா கூட்டணி, அதிமுக ஜெயிக்கும் குதிரை, தேர்தல் நெருங்கும் போது தெரியும், கூட்டணி கட்சிகள் யார் பக்கம் என்று. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக உலா வருகிறது, உளவுத் துறையையும், காவல் துறையையும் கொண்டு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள், ஆளுங்கட்சி அமைச்கர்கள் தொடங்கி நிர்வாகிகள் வரையில் அத்துமீறல்களிலும் அராஜகத்திலும் மட்டுமே ஈடுபடுகிறார்கள். அவர்கள் சட்டப்படி மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 29 மாத காலத்தில் நீட்டை ஒழிக்காமல், மக்களை ஏமாற்றி வருகிறார் உதயநிதி ஸ்டாலின், மக்களைச் சீட்டிங் செய்துள்ளது திமுக அரசு, இவர்கள் ஏமாற்றுப் பேர் வழிகள் என்பதால் யாரும் கையெழுத்து இடுவதில்லை, ஏமாற்றுப் பேர்வழிகளோடு அதிமுக செல்லாது. அதனால் குழந்தைகளிடம் கையெழுத்து பெறுகின்றனர்.
தொடர்ந்து, திமுக அமைச்சர்கள் பொதுவெளியில் நாகரிகமற்று செயல்பட்டு வருகின்றனர். சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டில் அமைச்சர் நேரு நாகரிகமற்ற கொச்சையான வார்த்தைகளை பேசி உள்ளார், அந்த அளவிற்கு மோசமான சுபாவம் கொண்டது தான் திமுக எனத் தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.