திமுக அமைச்சர்கள் பாகுபாடின்றி கலெக்சன், கரப்சனில் ஈடுபட்டு வருவதாக என மதுரையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை விமான நிலையம் அருகே ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக மாநில மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கான காவல்துறை அனுமதி கோரி ஏற்கனவே மனு அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறை அனுமதி தொடர்பாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்தை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில், “மாநாட்டிற்கான காவல்துறை அனுமதி தொடர்பாக எஸ்.பி-ஐ சந்தித்து பேசினோம். மாநாடு நடைபெறும் இடத்தினை காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளதாக எஸ்.பி கூறினார். மாநாட்டுக்கு விரைவில் காவல்துறை அனுமதி அளிக்கும் என எஸ்.பி கூறியுள்ளார். மாநாட்டினால் எந்தவொரு போக்குவரத்து நெரிசலும் வராத வண்ணம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சுமார் 25 ஆயிரம் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதிமுக மாநாடு தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகளுடன் மதுரையில் 31 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது,” எனக் கூறினார்.
தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்து கேட்டதற்கு, வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதே அமலாக்கத்துறை சோதனை, திமுக அமைச்சர்கள் பாகுபாடின்றி கலெக்சன், கரப்சனில் ஈடுபட்டு வருகின்றனர்,” என கூறினார்
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.