கோவை ; கோவையில் மோசமான சூழ்நிலை நிலவுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பின்னர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது ;- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த 10 கோரிக்கைகள் கூட்டத்தில் பங்கேற்றோம். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி பாதி தான் வந்துள்ளது.பாதி நிதி வரவில்லை. அந்த நிதியை முழுமையாக விடுவிக்க வேண்டும். பணிகளை தட்டிக் கழிக்காமல் செய்ய வேண்டும்.
கோவையில் எல்லா சாலைகளும் பழுதடைந்துள்ளது. சாலைகளை செப்பனிட வேண்டும். இப்பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
கோவையில் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. மக்கள் பயத்தில் உள்ளனர். 1998 குண்டு வெடிப்பு சம்பவம் போல நடந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. இவ்விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை குண்டு வெடிப்பு சம்பவங்களினால் 20 வருட வளர்ச்சி பின்நோக்கி சென்றது. அது தற்போது தான் சரியாகி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின், உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் எந்த வேலையும் பார்க்கவில்லை. உளவுத்துறை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமே செய்கின்றனர்.
இனியாவது விழித்துக் கொண்டு மக்களை பாதுகாக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள். அதற்கு ஒத்துழைப்பு தருவதாக ஜமாத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்த மதத்தையும் ஒதுக்க கூடாது. கோவை மக்கள் அமைதியை விரும்புகிறோம். கோவை குண்டு வெடிப்பு பாதிப்புகள் இன்னும் உள்ளது. இரு சமுகமூம் பாதிக்கப்பட்டது. முதலமைச்சருக்கு பணம் வாங்கித் தரும் வேலையை மட்டும் ஜஜி டேவிட்சன் செய்கிறார். மக்களை பாதுகாக்கும் வேலையை காவல் துறை பார்க்க வேண்டும். கோவையை காப்பாற்ற வேண்டும், எனத் தெரிவித்தார்.
விஜய் என்றால் கூட்டம்… நடிகர் விஜய் சாதாரணமாக பொதுவெளியில் தென்பட்டாலே கூட்டம் அலைமோதிவிடும். அப்படி இருக்கும்போது அவர் பிரியாணி கேட்டால்…
முன்னணி நடிகர் மலையாள சினிமா உலகில் முன்னணி நடிராக வலம் வருபவர் விநாயகன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்”…
அறக்கட்டளைக்கு பத்து கோடி நடிகர் சூர்யா 2006 ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை என்ற ஒன்றை…
கரூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்களுக்கு போலியாக பான்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து…
ரஜினியின் பக்தர்கள் தனக்கு பிடித்த நடிகரை கடவுளை போல் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. அதில் முதல் இடத்தில் இருப்பவர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்…
This website uses cookies.