நேற்று இரவு கவரப்பேட்டை அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை எந்த மரணமும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள் ரயில் பயணிகள்.
தென் மேற்கு இரயில்வே ரயில் எண். 12578 மைசூரு-தர்பங்கா விரைவு வண்டி சென்னை கோட்டத்தின் பொன்னேரி-கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு (சென்னையிலிருந்து 46 கி.மீ.) இடையே கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் 8.30 மணி அளவில் சென்னை – கூடூர் பிரிவில் சரக்கு ரயிலுடன் பின்புறம் மோதியது.
LHB பெட்டிகள் கொண்ட இந்த ரயில், கும்மிடிப்பூண்டியை மார்க்கமாக 8.27 மணி அளவில் பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்து, மெயின்லைன் வழியாக கவரைப்பேட்டை அடுத்த ரயில் நிலையம் வழியாக இயக்க பச்சை சிக்னல் காட்டப்பட்டது.
கவரைப்பேட்டை ஸ்டேஷனுக்குள் நுழையும் போது, ரயில் பணியாளர்கள் கடும் இழுபறிக்கு ஆளானதால், லைன் க்ளியர் & சிக்னல்களின்படி மெயின் லைனுக்குள் செல்லாமல், ரயில் 75 கிமீ வேகத்தில் லூப்/லைனில் நுழைந்து, லூப் லைனில் நின்ற சரக்கு ரயிலை மோதியது.
இதனால் இன்ஜின் அருகே இருந்த பவர் கார் தீப்பிடித்து எரிந்ததால், தீயணைப்பு படையினர் அணைத்தனர். மொத்தம் 12-13 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இரண்டு பெட்டிகள் மோதி வேகத்தில் எரிய தொடங்கின தீயணைப்பு வாகனங்கள் கடந்து வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கற்றுக் கொண்டு வந்தனர்.
இதுவரை, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. காயமடைந்த பயணிகள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு திசைகளிலும் ரயில் இயக்கம் மூடப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ நிவாரண வேன் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.
உதவி எண்கள்:
சென்னை பிரிவு:
04425354151
0442435499
பெங்களூரு பிரிவு:
8861309815
மைசூர் பிரிவு:
9731143981
கேஎஸ்ஆர் பெங்களூரு, மாண்டியா மற்றும் கெங்கேரி நிலையங்களில் உதவி மையங்கள் உள்ளன
மைசூர் நிலையத்தில் உதவி மையம் (08212422400) உள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு அமைச்சர் ஆவடி சாமு நாசர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு ஷங்கர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் ரயில்வே ஊழியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
மீட்கப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு புதிதாக விரைவு ரயில் ஏற்படுத்தி இன்று அவர்கள் பீகாருக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் பத்துக்கு மேற்பட்டோர் சுமாரான காயங்களிலும் சிக்கி உள்ளார்கள். இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக செய்யப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் சென்னை கோட்டை மேலாளர் விஸ்வநாத் ஏரியா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு சென்று மதிப்பு பணிகளை உபயோகப்படுத்தப்பட்டது விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டனர்
இதை எடுத்து விசாரணைக்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது இந்த விபத்து காரணமாக கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திரா தெலுங்கானா சத்தீஸ்கர் பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் ரயில் போக்குவரத்து முடங்கியது சில ரயில்களை மாற்று பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது
வேகமாக செல்லும் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களுக்கு வழி விடுவதற்காக மற்றவர்களை ஓரங்கட்டி நிறுத்த லூப் லைன் அமைக்கப்படுகிறது
இந்த லைனில் தவறான சிக்னல் காரணமாக விரைவு ரயில் சென்றது விபத்திற்கு காரணமானது முதற்கட்ட விசாரணையின் தெரியவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் புறநகர் ரயில் நிலையங்கள் காத்திருந்த பயணியர் வீடு திரும்ப முடியாமல் அவதி உற்றன.
தொடர்ந்தும் மீட்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ குழு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரம் என்பதால் மீட்பு பணி தாமதமாக இருந்தாலும் சவாலாக செயல்பட்டனர்.
இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை விபத்தில் காயப்பட்டவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.